தமிழக செய்திகள்

கனமழை எதிரொலி.. நீலகிரி மலை ரெயில் சேவை ரத்து

கடந்த மாதம் 23-ம் தேதி பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

குன்னுார்,

மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு ரெயில் வரும் 13-ம் தேதி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை

நீலகிரி மலை ரெயில் பாதையில், மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்ததால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை இன்று (10-ம் தேதி) வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக நீலகிரி மாவட்டத்தில், அக்டோபர் 23-ம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தண்டவாளத்தின் மீது பெரிய பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்ததால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

சிறப்பு மலை ரெயில்

கடினமான மலை பாதையில், ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறவில்லை. இதனால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் மற்றும் சிறப்பு மலை ரெயில் இன்று வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

ரத்து

இந்நிலையில் நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- உதகை இடையேயான மலை ரெயில் சேவை நாளை (நவ., 11-ம் தேதி) முதல் நவ.13-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT