தமிழக செய்திகள்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. அதிகபட்ச மழைப்பதிவு எந்த பகுதியில்..?

சென்னையில் மீண்டும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எம்.ஜி.ஆர் நகரில் 15 செ.மீ மழைப்பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 26-ந் தேதி வரையில் (அதாவது இன்று முதல் 6 நாட்களுக்கு) கன முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கனமழை

இதுதவிர வருகிற 23-ந்தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர் நகர்

இந்நிலையில் சென்னையில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எம்.ஜி.ஆர் நகரில் 15 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது. மேலும் வடபழனியில் 14 செ.மீ., சைதாப்பேட்டை, ஆலந்தூர் மற்றும் காஞ்சி கொளப்பாக்கத்தில் 13 செ.மீ., மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், மதுரவாயல், குமரி குளச்சலில் 12 செ.மீ மழைப்பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT