தமிழக செய்திகள்

ஜவ்வாது மலையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர் - மலைவாழ் மக்கள் அச்சம்

ஹெலிகாப்டர் பறப்பதற்க்கும் நீர்மின் திட்டத்திற்கும் தொடர்பு உள்ளதா என மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, கடந்த சில நாட்களாக தாழ்வாக பறந்து வட்டமிட்ட ஹெலிகாப்டரால், மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அல்லேரி மலைப்பகுதியில் நீர்மின் திட்டம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், ஜவ்வாது மலையின் ஜமுனாமரத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர் பறப்பதற்க்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா என மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ஹெலிகாப்டர் எந்த துறையின் சார்பில், எதற்காக பறக்கிறது என்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT