தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.93-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்லடத்தில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.86 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT