தமிழக செய்திகள்

சென்னை - அரக்கோணம் ஏ.சி. ரெயில் பயண கட்டணம் விவரம் வெளியீடு

இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடி யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கடற்கரை -செங்கல்பட்டு வழித்தடத்தில் முதல் கட்டமாக ஏ.சி. மின்சார ரெயில் சேவை கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு, பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து சென்ட்ரல் -அரக்கோணம் வழித்த டத்தில், ஏ.சி. மின்சார ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏ.சி.ரெயில் கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு ரெயில்வே யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவற்றின் பாதுகாப்பு தன்மை. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சோதனை ஓட்டங் கள் நடத்தப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை (23-ந்தேதி) முதல் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. வருகிற டிசம்பர் 24-ந்தேதி வரை

சோதனை முறையில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

வாரத்தில் சனி, ஞாயிறு தவிர மற்ற 5 நாட்களில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சந்திப்பை சென்றடைகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் நிலையத்தை நிலையத்தை காலை 8.30 மணிக்கும், சென்ட்ரல் நிலையத்தை காலை 9.30 மணிக்கும் வந்தடையும். இந்த ரெயில் திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

முன்னதாக இந்த ரெயில் ஆவடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும். மற்றொரு சேவை சென்ட்ரலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 10.25 மணிக்கு ஆவ டியை அடையும். ஆவடியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு மாலை 6.10 சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

பயண கட்டணம் விவரம் வெளியீடு

1 முதல் 10 கி.மீ. வரை -ரூ.35, 11 முதல் 15 கி.மீ. வரை - ரூ.40, 16 முதல் 25 கி.மீ. வரை - ரூ.60, 26 முதல் 35 கி.மீ. வரை -ரூ.85, 36 முதல் 5.90, 46 45 கி.மீ. வரை --முதல் 50 கி.மீ. வரை - ரூ.95, 51 முதல் 55 கி.மீ. வரை ரூ.100, 56 முதல் 60 கி.மீ. வரை - ரூ.105, 61 முதல் 65 கி.மீ. வரை – 5.115, 66 5 70 கி.மீ. வரை - ரூ.120.

SCROLL FOR NEXT