கோயம்புத்தூரில் வருமான வரித்துறையாலும், சிவில் நீதிமன்ற உத்தரவுகளாலும் முடக்கப்பட்டுள்ள சொத்தை மகேஷ் கண்ணன் என்பவர் வாங்கியுள்ளார். முடக்கப்பட்ட சொத்து என்பதால் அதன் விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்துள்ளார். இதை எதிர்த்து மகேஷ் கண்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, "மோசடி அல்லது போலியான ஆவணங்கள் தொடர்பான பத்திரப்பதிவுகளுக்கு மட்டுமே பதிவுச் சட்டம் பிரிவு 22-B தடையாக இருக் கிறது. எனவே, மனுதாரரின் விற்பனைப் பத்திரத்தை சார் பதிவாளர் உடனடி யாக பதிவு செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அசிக் அலி, அஜ்ஜூர் முகமது ஆகியோர் மேல்முறை யீடு செய்தனர். அதில், இந்த சொத்தை முடக்கம் செய்ய நாங்கள் உத்தரவு பெற்றிருந்தோம் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "நீதி மன்றம் மற்றும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ள சொத்து விற்ப னையை பதிவு செய்ய, பத்திரப் பதிவு சட்டம் தடை செய்கிறது. சொத்து முடக் கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டத்திற்கு முரணானது" என்று வாதிட்டார். இதற்கு எதிர் மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”வருமான வரித்துறை அல்லது நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட சொத்துகள் தொடர்பான விற்பனை ஆவணங்க ளைப் பத்திரப்பதிவு செய்ய முடியாது. அதற்குச் சட்டரீதியான தடை உள்ளது.
சார்பதிவாளர், ஒரு ஆவணத்தைப் பதிவு செய்ய மறுத்தால், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சட்டத்தில் மாற்றுத் தீர்வுகள் உள்ள நிலையில், நேரடி யாக ஐகோர்ட்டில் வழக்குத் தொடர முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம். தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த விற்பனைப் பத்திரத்தையும் ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.