ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுகர்நாடகா அணிகளில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 12ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது . இந்த நீர் வரத்து குறைந்துநேற்று காலை6 மணி நிலவரப்படி 10ஆயிரம் கன அடியாக குறைந்தது .இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது
மேலும் ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி ,சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
இந்த நிலை சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர் . அவர்கள் மெயின் அருவி, காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து மகிழ்ந்தனர் . மேலும்ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7-வது நாளாக நீடிக்கிறது . இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .