தமிழக செய்திகள்

ஹோலி பண்டிகை: எர்ணாகுளம்-முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

ஹோலி பண்டிகையையொட்டி எர்ணாகுளம்-முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹோலி பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளம்-பீகார் மாநிலம் முசாபர்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 20,27, மார்ச் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு முசாபர்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06085), கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் காலை 7.30 மணிக்கு முசாபர்பூர் சென்றடையும்.

மறுமார்க்கமாக, முசாபர்பூரில் இருந்து வருகிற 23, மார்ச் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் வரும் சிறப்பு ரெயில் (06086), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.