சென்னை,
ஹோலி பண்டிகைக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு திருவனந்தபுரம் வடக்கு-சாந்த்ராகாச்சி (கொல்கத்தா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் வடக்கு-சாந்த்ராகாச்சி சிறப்பு ரெயில் (வண்டி எண்-06081) வருகிற 13 மற்றும் 20-ந் தேதியில் இயக்கப்படுகிறது.
அந்த ரெயில் வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு சனிக்கிழமை அதிகாலை 2.03 மணிக்கு வந்தடையும். அதன்பிறகு 2.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மதியம் 2.15 மணிக்கு சாந்த்ராகாச்சி சென்றடையும்.
அதேபோல் மறுமார்க்கத்தில் சாந்த்ராகாச்சி-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06082) வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளில் 2 சேவை மட்டும் இயக்கப்படுகிறது. அதாவது திங்கட்கிழமை அன்று சாந்த்ராகாச்சியில் மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காரக்பூர், பாலசோர், புவனேஸ்வர், நெல்லூர் விஜயநகரம், ரேணிகுண்டா, திருத்தணி. காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு செவ்வாய்கிழமை இரவு 9.27 மணிக்கு வந்தடைகிறது.
அதன்பிறகு இங்கிருந்து 9.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியாக திருவனந்தபுரத்திற்கு புதன்கிழமை காலை 9.55 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட் டுள்ளது. எனவே, இந்த சிறப்பு ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.