தமிழக செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் 11-ந்தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

வருகிற 11-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி, 11-ந்தேதி அன்று சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய விடுமுறைக்கு பதிலாக வேறொரு நாட்களில் பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் இயங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே போல திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடி அருங்காட்சியகம் பார்வை யாளர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 11-ந்தேதி இயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT