தமிழக செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருகிறது.

ஈரோடு,

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடைந்து, ஆந்திரா-ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை தொடர்ந்து வருகிறது.

பள்ளிகள் விடுமுறை

இந்நிலையில் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் செயல்படக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT