தமிழக செய்திகள்

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? தமிழக அரசு முக்கிய முடிவு!

தற்போது 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாஸ்மாக் கடை

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

பண்டிகை நாட்களில் விடுமுறை

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பண்டிகை நாட்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, இனி பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT