தமிழக செய்திகள்

நாளை விடுமுறை... இன்றே டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மதுப்பிரியர்கள்

டாஸ்மாக் கடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

நாளை மதுகடைகள் திறக்கப்படாது என்பதால் இன்றே மதுப்பிரியர்கள் படையெடுத்துள்ளனர்.

விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு நாளை (ஆக. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குவிந்த மதுபிரியர்கள்

இதையடுத்து, நாளை மதுபானக் கடைகள் மூடப்படுவதால், இன்று திருவெறும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க ஏராளமான மதுபிரியர்கள் குவிந்தனர்.

பரபரப்பு

ஒரே நேரத்தில் ஏராளமானோர் மதுபானம் வாங்க குவிந்ததால், டாஸ்மாக் கடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.