சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* உள்துறை செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கார்த்திக், உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மின் உற்பத்திக் கழக தலைவராகவும் இவர் செயல்படுவார்.
* ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம். செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.