கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

காங்கிரசின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!

Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அமமுக உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

Scene 3: அதிமுக உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.