தமிழக செய்திகள்

கும்பாபிஷேக விழா: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பில் குதிரைப்படை போலீஸ்

24 மணி நேரமும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை,

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மதுரை மாநகர காவல்துறை சார்பில் கூடுதல் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். சீருடை அணியாத மப்டி போலீசாரும் தீவிர ரோந்துப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு மாசி வீதிகளில் போலீசார் சைக்கிள்களில் சென்று ரோந்துப் பணியை மேற்கொள்ளும் வகையில் 4 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதன்படி போலீசார், சைக்கிளில் சென்று, இரவு, பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒலி பெருக்கியும் வழங்கப்பட்டு பக்தர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இன்னும் கும்பாபிஷேகத்திற்கு 10 தினங்களே இருப் பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் குதிரைகள் மூலம் போலீசார் ரோந்துப் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அதற்காக 2 குதிரைகளில் போலீசார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் வலம் வருகின்றன.

SCROLL FOR NEXT