தமிழக செய்திகள்

குதிரை பேரம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய பொதுநல மனு தள்ளுபடி

செய்திதாள் வந்த செய்திகள், சமூக ஊடகங்களில் வந்த தகவல்கள் ஆகியவற்றிந் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்,

சென்னை,

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ-வான இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்து, பிறப்பித்த தீர்ப்பில், ‘‘உள்ளூர் போலீசார் சரி வர வழக்கை விசாரிக்க வில்லை என்றாலோ, உண்மையை கண்டறிய முடியவில்லை என்றாலோ அல்லது சமரசமாக சென்றாலோ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றலாம்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையைக்கூட மனுதாரர் எடுத்துக்கூறி நிரூபிக்கவில்லை. செய்திதாள் வந்த செய்திகள், சமூக ஊடகங்களில் வந்த தகவல்கள் ஆகியவற்றிந் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்லார், இவர் கூறும் காரணத்துக்காக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற முடியாது. பொதுநல வழக்கு என்பது வலிமைமிக்க ஒரு ஆயுதம்.

அது குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கூடியது. இந்த குதிரை பேரம் வழக்கில் ஏற்கனவே பலரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே, சரி பார்க்கப்படாத ஊடக செய்திகளின் அடிப்படையில் புலன்விசாரணையை மாற்ற முடியாது. இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT