சென்னை,
த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 1-ந் தேதி கைதான நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், போலீசார் கூறும் குற்றச்சாட்டுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், வழக்கு விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, திருவல்லிக்கேணி சரக போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், தற்போதைக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை முழுவதும் பாதிக்கப்படுவதோடு, சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, போலீசாரின் வாதங்களை ஏற்று 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.