தமிழக செய்திகள்

ஒசூர்: ஆலை கட்டுமான பணியில் கதவு விழுந்து 3 பேர் பலியான சோகம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியின் ஒசூர் நகரில், ஆலையில் நுழைவு வாசலுக்கான கதவு விழுந்ததில் சிக்கி 3 பேர் பலியான சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஆட்டோ பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்படுகிறது. இதன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆலையில் நுழைவு வாசலுக்கான கதவு அமைப்பதற்கான பணி நடந்து வந்தது.

3 பேர் பலி

அப்போது எதிர்பாராத வகையில், அந்த கதவு விழுந்ததில் அடியில், 3 பேர் சிக்கி கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT