உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

இன்னும் எத்தனை கொலைகள் நடக்கும் இந்த ஆட்சியில்? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி

ரவுடிகள் சாதாரணமாக கொலை செய்துவிட்டு டாடா காட்டி தப்பிக்கின்றனர் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இன்னும் எத்தனை கொலைகள் நடக்கும் இந்தக் கோமாளிகள் ஆட்சியில்? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்

பாதுகாப்பு இல்லை

இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்னும் பெண்ணை மர்ம நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், இந்த ஆட்சியில் மக்களுக்கு இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்களில் 7 கொலைகள் நடந்திருப்பதற்கு காவல்துறை மற்றும் அதனை கையில் வைத்திருக்கும் டம்மி முதல்-அமைச்சரின் தோல்வியே காரணம்.

சட்டம் ஒழுங்கிற்கு டாடா

அடிக்கடி சாலைகளில் டாடா காட்டும் முதல்-அமைச்சர், சட்டம் ஒழுங்கிற்கும் ஒரேயடியாக டாடா காட்டிவிட்டதால், ரவுடிகள் Casual-ஆக கொலை செய்துவிட்டு டாடா காட்டி தப்பிக்கின்றனர்.

பழிவாங்கவும் - பழிபோடவும் ஆளாய் பறக்கும் இந்த அரைவேக்காடு ஆட்சியாளர்கள், மக்கள் பலியாவதை எப்போது தடுப்பார்கள்? Dummy CM சொன்ன Efficient Officers எல்லாம் எங்கே போனார்கள்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT