சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, பிரசாரம், தொகுதி பங்கீடு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் திமுக கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பல்வேறு கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை காண்போம்.
காங்கிரஸ் - 28
தேமுதிக - 10
விடுதலை சிறுத்தைகள் - 8
இந்திய கம்யூனிஸ்டு - 5
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு - 5
மதிமுக - 4
கொங்கு மக்கள் தேசிய கட்சி - 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2
மனிதநேய மக்கள் கட்சி - 2
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக 168 தொகுதிகளை கைவசம் வைத்துள்ளது. மேலும், சில கூட்டணி கட்சிகளுக்கு திமுக இன்னும் தொகுதிகளை ஒதுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.