தமிழக செய்திகள்

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர்?

அதிகபட்சமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 83,402 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டின் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் – 5,67,07,380.

ஆண்கள் – 2,77,38,925.

பெண்கள் – 2,89,60,838.

மூன்றாம் பாலினத்தவர் – 7,671.

பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 6 மூலம் ஏற்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 27,53,796.