தமிழக செய்திகள்

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகள் எவ்வளவு.?

அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று தவெகவில் இணைந்தனர்.

சென்னை,

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாராபுரம் (தனி), மதுராந்தர்கம், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று தவெகவில் இணைந்தனர். அவர்கள் மூவரும் சட்டசபை தேர்தலில் பெற்றுள்ள வாக்குகள் விபரம் பின்வருமாறு;

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா கடந்த சட்டமன்ற தேர்தலில் 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இந்திராணி 64 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்றார். இதன் மூலமாக 16 ஆயிரத்து 727 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா வெற்றி வாகை சூடினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2026 தேர்தலிலும் 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டதி.மு.க. வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் 60,609 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் கடந்த 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் வெற்றிக்கனியை பறித்தார். இவர் பெற்ற வாக்குகள் 69,284 ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்டத.வெ.க. வேட்பாளர் கேத்தரின் ஏழுமலை 62,090 பெற்றார்.

இந்த 3 தொகுதிகளுக்கும், விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும்.