தமிழக செய்திகள்

11 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் எவ்வளவு...?

தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை 2,15,40,712 வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை,

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 2,15,40,712 வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 11 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது.

டாப் 5 மாவட்டங்கள்:-

திருப்பூர்: 42.45%,

நாமக்கல்: 41.41%

ஈரோடு: 41.00%

சேலம்: 40.56%

கரூர்: 39.70%