தமிழக செய்திகள்

வெண்டை பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? - அதிகாரி விளக்கம்

பூச்சி தாக்குதலால் நேரடியாக மகசூல் அளவு மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது.

மதுரை,

வெண்டை பயிரில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து தோட்டக்கலை அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர்.

பூச்சி தாக்குதல்

வெண்டைக்காய்களில் காணப்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து தோட்டக்கலை அதிகாரி கூறுகையில், வெண்டை பயிரை பாதிக்கும் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் நாவாய் பூச்சி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல். இது மிக முக்கியமான பூச்சி தாக்குதலாக கருதப்படுகிறது. ஏனெனில் பூச்சி தாக்குதலால் நேரடியாக மகசூல் அளவு மற்றும் தரம் பாதிக்கப்படுகிறது. பல்வேறு பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சாறு உறிஞ்சும் பூச்சிகள் பிரதானமாக பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பூச்சிகள் இளம் காய்களில் துளையிட்டு சாற்றை உறிஞ்சும். இதனால் ஏற்படும் காயத்தை சரி செய்வதற்கும், பூச்சிகள் செலுத்தும் நச்சு திரவத்தால் சற்று மேடான வெண்மை நிற புள்ளிகள் காணப்படும். நாளடைவில் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் காய்களின் தரம் குறையும்.

பயிர் சுழற்சி

பாதிக்கப்பட்ட காய்கள் சற்று ஒழுங்கற்ற வடிவில் மாறும். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் காய்களின் உட்புறத்தில் நிறம் மாற்றம் காணப்படும். இதனுடன் சேர்ந்து போரான் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படும்போது மேலும் காய்கள் வளைந்து நெளிந்து காணப்படும். களைகள் மற்றும் பயிர் கழிவுகள் இன்றி வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும். வயலை சுற்றி சூரியகாந்தி நடவு செய்வதன் மூலம் பூச்சி தாக்கத்தை தவிர்க்கலாம். அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்கலாம். முதிர்ந்த பூச்சிகளை கையால் சேகரித்து அழிக்க முயற்சி செய்யலாம். முன்னெச்சரிக்கை அளவு ஆரம்ப கால பூச்சி தாக்குதலின் போது பூச்சி விரட்டு திரவமான வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல் அல்லது சோப்பு கரைசல் போன்றவற்றை சுழற்சி முறையில் தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலின் தீவிரத்தை குறைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT