சென்னை,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை “காக்கும் பணி எங்கள் பணி” என்ற உன்னதமான நோக்கத்துடன் பொதுமக்களுக்கு சேவையாற்றும் ஒரு துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து பொதுமக்களையும் உடமைகளையும் காப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.
பொதுமக்கள் மத்தியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையால் கடந்த வருடம் “வாங்க கற்றுக்கொள்வோம்” என்ற தலைப்பில் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைங்களில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது. சுமார் 50000 பொதுமக்கள் இப்பியிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பின் அடிப்டையில், தீ பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வை மேலும பரப்பும் நோக்கில் இவ்வருடமும் இப்பயிற்சி வரும் 06.06.2026 மற்றும் 07.06.2026 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து 385 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைங்களிலும் காலை 11.00 முதல் 12.00 மணி மற்றும் மாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலும் இப்பயிற்சியினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைங்களுக்கு நேரடியாக சென்று இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாகும் முன்பதிவு எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை.