தமிழக செய்திகள்

ராமேசுவரம் கோவிலில் ரூ.1½ கோடி உண்டியல் காணிக்கை

ராமேசுவரம் கோவிலில் ரூ.1½ கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த பணியில் கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு மாத காணிக்கையாக ரூ.1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 686 கிடைத்தது.தங்கம் 45 கிராமும், வெள்ளி 560 கிராமும் இருந்தது.

SCROLL FOR NEXT