தமிழக செய்திகள்

மனைவியை தாக்கிய கணவர் கைது

தூத்துக்குடி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35). இவரது மனைவி சுமதி (32). செல்வராஜ் மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். நேற்று முன்தினம் வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்து சுமதியிடம் தகராறு செய்த அவர், கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தார்.

SCROLL FOR NEXT