தமிழக செய்திகள்

“மாபெரும் மாரத்தான் போட்டியை துவங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” - அண்ணாமலை

பெண்கள் ஆரோக்கியமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறுகிற போது மட்டுமே இந்த சமூகம் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது.

திருப்பூர்,

திருப்பூர் அலகுமலை பகுதியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு விழிப்புணர்வு மாரத்தான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இதை வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை காலை 5 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தானில் கலந்து கொண்டவர்களுடன் சேர்ந்து அண்ணாமலை ஓடினார்.

இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

நமது வீ.த.லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக இன்று காலை அலகுமலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை போற்றும் விதமாக, நம் சகோதர சகோதரிகள் உற்சாகமாக கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பெண்கள் ஆரோக்கியமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறுகிற போது மட்டுமே இந்த சமூகம் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது. உடலினை உறுதி செய்வதன் மூலம் மனதினையும், சிந்தனையையும் பலப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முழு ஊக்கத்துடன் மக்கள் கலந்து கொள்வது மனநிறைவாக உள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT