தமிழக செய்திகள்

நான் ரீல் பிக் பாஸ் அல்ல; ரியல் பிக் பாஸ் - சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நெகிழியை ஒழித்து விடுவோம் என சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

பல்லாவரத்தில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

தலைநகரை 60 ஆண்டு காலம் ஆண்ட திமுக, அதிமுக நம் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்று விட்டனர்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நெகிழியை ஒழித்து விடுவோம்.

கல்வி மற்றும் தரமான மருத்துவம் இரண்டையும் இலவசமாக தருவேன், மற்ற எதையும் என்னிடம் இலவசமாக எதிர்பார்க்காதீர்கள், வேண்டுமென்றால் அவர்களுக்கு வாக்களித்துக் கொள்ளுங்கள்.

அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா; குப்பை வீசிவிட்டு போக முடியாது.நான் ரீல் பிக் பாஸ் அல்ல; ரியல் பிக் பாஸ் என்றார்.