தமிழக செய்திகள்

அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் - சரத்குமார் பேட்டி

முதல்-அமைச்சர் விஜய் வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை ஈர்த்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாகர்கோவில்,

"நான் அரசியலில் தற்போது இல்லை, ஒதுங்கி இருக்கிறேன். தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க நிறைய பேர் உள்ளனர்" என்று மழுப்பலாக கூறிவிட்டு சென்றார்.

திருமண விழாவில் சரத்குமார்

நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண விழாவில் பிரபல நடிகரும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் கலந்து கொண்டார். அவர் மணமக்களை வாழ்த்தியதோடு, பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மணமக்களுடன் இணைந்து ஏழைகளுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.

நான் அரசியலில் தற்போது இல்லை..

பின்னர் நிருபர்கள், சரத்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதாவது "தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளிநாட்டிற்கு சென்று முதலீடுகளை ஈர்த்து இருப்பதாக கூறியிருக்கிறார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்டனர். அதற்கு அவர் உடனடியாக பதில் அளிக்காமல் நகர்ந்து சென்றார். நடந்து சென்று கொண்டே அவர் கூறுகையில் "நான் அரசியலில் தற்போது இல்லை, ஒதுங்கி இருக்கிறேன். தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்க நிறைய பேர் உள்ளனர். மாநில தலைவர் இருக்கிறார், அவர் பதில் அளிப்பார்" என்று மழுப்பலாக கூறிவிட்டு சென்றார். சரத்குமாரின் இந்த பதில் அங்கு இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT