சென்னை,
அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக முதல்-அமைச்சர் பொறுப் பேற்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, முதல்-அமைச்சர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார் என்றுதான் கூறினேன்.தற்போதுள்ள நிலை குறித்து நான் எந்த கருத்தும் கூறாதபோது அதற்கு மாறாக சில ஊடகங்களில் திரித்து செய்தி வெளிவந்திருப்பதை வன்மை யாக கண்டிக்கிறேன். மறுக்கிறேன்.
மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுமாதிரி எந்த கருத்தும் கூறாத போது இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் ஆகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.