தமிழக செய்திகள்

தமிழுக்காக நல்ல கருத்தை பேசியுள்ளேன்: கமல்ஹாசன் பேட்டி

நாடாளுமன்றத்தில் நான் பேசியது நல்ல கருத்து, அந்த கருத்தை விவாதத்துக்குள்ளாக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் நான் பேசியது நல்ல கருத்து. அந்த கருத்து விவாதத்துக்குள்ளாக வேண்டும். தமிழுக்காக நல்ல கருத்து பேசியதாக எனக்கு தோன்றுகிறது. இதை மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும். இதில் உண்மை என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும். ஜனநாயகத்தில் இப்படிதான் இருக்க வேண்டும். விவாதங்கள் தொடர வேண்டும். என்னுடைய கூட்டணி இந்தியாவுடன். இந்தியாதான் என்னுடைய நலன். உங்களுடைய நலனும்கூட. கூட்டணி என்பது 5 வருடங்களுக்கு ஒரு முறை பேசுவது. சித்தாந்தம்தான் முக்கியம். அதை நோக்கிதான் செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.