சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி இருவருக்கும் நீண்ட நாட்களாக வார்த்தை போர் நிலவி வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். இந்நிலையில் இன்று ராமதாஸ் புதிதாக ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்திற்கு விரோதமாக அன்புமணி பாமக தலைவராக நீடித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். அன்புமணிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பதிலளிக்க அன்புமணி ராமதாசின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.