தூத்துக்குடி,
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் பாதுகாப்பு இல்லை. விளம்பர ஆட்சி மட்டும் தான் நடக்கின்றது. இந்துக்கள் இந்த ஆட்சியில் புறக்கணிப்பட்டு வருகின்றனர். தமிழ் இன அடையாளத்தை திமுக தொலைத்து வைத்திருக்கின்றது. அதனை நடைபெற இருக்கும் தேர்தலில் மீட்டு எடுப்போம். திருமாவளவன் போன்றோர்கள் நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்கின்றனர்.
நாங்கள் கூட்டணி குறித்து யாருக்கும் அழுத்தம், நெருக்கடி கொடுக்கவில்லை. திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் மட்டும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளோம். வேறு யாரும் கூட்டணிக்கு வருவார்களா என்று தெரியாது. ஆனால் இப்போது இருக்கக்கூடிய எங்கள் கூட்டணியே பலமாக உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.