தமிழக செய்திகள்

வானதி சீனிவாசன் விரைவில் பூரண உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன் - டிடிவி தினகரன்

பிரசாரத்தின் போது திடீரென வானதி சீனிவாசனுக்கு கால் வலி ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்பொழுது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரசாரத்தின் போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக திடீரென அலர்ஜி ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் மேலும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்கப்பட வேண்டிய நிலை இருக்கும் என்ற ஒரு தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. இதனால் வானதி சீனிவாசன் அடுத்தடுத்து பிரசாரத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தேன்.

வானதி சீனிவாசன் விரைவில் பூரண உடல்நலம் பெற்று தனது தேர்தல் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவரி தெரிவித்துள்ளார்.