தமிழக செய்திகள்

“நடிகர் திலகத்துடன் பழகிய தருணங்களை நினைவுகூர்கிறேன்” - மு.க.ஸ்டாலின்

சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர்.

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நடிகர் திலகம்

சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாள்.

இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT