மன்னார்குடி,
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் சசிகலா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மன்னார்குடி, வேதா ரண்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த தேர்தலில் 505 வாக்குறுதிகளை கொடுத்து அதில் 50 வாக்கு றுதிகள் கூட நிறைவேற்றவில்லை.
இப்போது மக்களுக்கு டோக்கன் தருகிறோம் என்று சொல்லி தி.மு.க.வினர் ஓட்டு கேட்கிறார்கள். ரூ.8 ஆயிரம் டோக்கன் தருவதாக ஆசை காட்டுகிறது. தி.மு.க. கடன் வாங்கி, கடன் வாங்கி தமிழ்நாட்டு மக்கள் மீது கடனை சுமத்தி உள்ளார்கள்.
அம்மா(ஜெயலலிதா) இருந்தபோது சாதாரண தொண்டனைக்கூட எம்.எல்.ஏ.வாக ஆக்கினார். அம்மா இருந்தவரை அமைதியாக இருந்தார்கள். அம்மா இருந்தவரை வாலை சுருட்டிக் கொண்டு இருந்தார்கள். நான் இருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பார்கள். நான் பெங்களூரு போனதால் குளிர்விட்டு போச்சு.
இவ்வாறு அவர் பேசினார்.