தமிழக செய்திகள்

தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன்: எல்.முருகன் பேட்டி

டெல்லியில் இருந்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று சென்னை திரும்பினார்

சென்னை,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரியாக எல்.முருகன் கடந்த 9-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்நிலையில், டெல்லியில் இருந்து எல்.முருகன் இன்று சென்னை திரும்பினார். தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு வந்த எல். முருகனுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மத்திய இணை மந்திரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,

தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட எனக்கு பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார்.தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன். தமிழகத்திற்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தவறான தகவல் மற்றும் வதந்தி பரப்புபவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT