தமிழக செய்திகள்

நாளை தவெகவில் இணைகிறேன்: சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல்

தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில், தேர்தல் தோல்விக்கு பின்னர் அக்கட்சியின் முன்னணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்து செயல்பட்டனர்.

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள், கட்சி கட்டளையை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்க ளித்தனர். எனவே அவர்களின் கட்சிப்பதவிகளை பறித்து, கட் சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. இதனிடையே மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. வில் இணைந்தனர்.

விஜயபாஸ்கர்கள் ராஜினாமா

இதேபோல் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இருந்து விலகினார். அடுத்த அதிர்ச்சியாக கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பு அடங்கும் முன், அவர் நேற்று அ.தி.மு.க.வில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை (வியாழக்கிழமை) த.வெ.க.வில் இணைவதாக தகவல்கள் வெளியாகின.

தவெகவில் இணைவு

இந்த நிலையில், நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக சி.விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக த.வெ.க.வில் இணைகிறேன். த.வெ.கவில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருக்கிறேன். மாபெரும் இணைப்பு விழா நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. என்று கூறியுள்ளார்.