தமிழக செய்திகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் துணை செயலாளர் பி.முருகேஷ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைமை செயல் அதிகாரி ஆர்.ஜெயினுலாதீன், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள என்.எஸ்.முகமது அஸ்லாம் பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.