தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளில் இருந்தும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஐஏஸ் அதிகாரிகள் பலரும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:
தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்
உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம்
டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம்
சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம்
மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்
சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம்
கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி நியமனம்
தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம்