தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - சென்னை மாநகராட்சிக்கு புதிய ஆணையர்

சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் சில முக்கியமான நியமனங்கள் பின்வருமாறு:

▪️நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

▪️கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக அமுதா நியமனம்

▪️ சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் நியமனம்

▪️முன்னாள் முதல்வரின் இணை செயலாளராக இருந்த லட்சுமிபதி நிதித்துறை இணை செயலராக நியமனம்

▪️இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ, நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அவர் ஜெயகாந்தனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

▪️தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த அனில் மேஷ்ராம், எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

▪️கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலாளராக இருந்த டாக்டர் கே.எஸ். பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

▪️நிதித்துறையின் செலவினப் பிரிவு செயலாளராக இருந்த பிரசாந்த் எம் வாட்னெரே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ககன்தீப் சிங் பேடிக்கு பதிலாக பொறுப்பேற்கிறார்.

பதிவுத்துறையின் தலைமை ஆய்வாளராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஒலிவர், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் டாக்டர் ஜி.எஸ். சமீரனுக்கு பதிலாக பொறுப்பேற்கிறார்.

SCROLL FOR NEXT