தமிழக செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சுகாதாரத்துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவராக உதயச்சந்திரன் நியமனம்

சென்னை,

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபப்ட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

சமூக நலம், மகளிர் நலத்துறை செயலாளராக மரியம் பல்லவி பல்தேவ் நியமனம்

சுகாதாரத்துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவராக உதயச்சந்திரன் நியமனம்

கால்நடை வளர்ப்பு மீனவர் நலத்துறை செயலாளராக அனு ஜார்ஜ் நியமனம்

தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித நிறுவன தலைவராக குமார் ஜெயந்த் நியமனம்