அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்தான். ஆனால் தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருக்கிறார்கள். அவர்கள் அதிமுகவில் இருக்கிறார்களே தவிர, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எங்களை வேண்டுமானாலும் அவர் நீக்கிவிட்டு போகிறார்.
பிடித்தவர்களை மட்டும் வைத்து கொள்ளட்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடருமா என்பதை காலம் தான் பதில் சொல்லும். 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிறது. அதன் முடிவுகளை மக்களும், கட்சிக்காரர்களும், எம்எல்ஏ-க்களும் பார்ப்பார்கள். இதன்பின் அரசியல் மாற்றம் நிச்சயமாக வரும். யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
யாரும் தேவையில்லை என்று முடிவு எடுத்தார் என்றால், எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக ஏமாற்றம் அடைவார். திருந்த மாட்டேன் என்றால், விளைவுகளை அவர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் திமுக தயவில் முதல் அமைச்சராக முயன்றார் எடப்பாடி பழனிசாமி.அதிமுகவை ஒருங்கிணைக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றம் ஏற்படும் . திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகிறேன் என்று சொன்னதால் அது பிடிக்காமல் எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தனர்." இவ்வாறு அவர் கூறினார்.