AI image 
தமிழக செய்திகள்

“HOUSE WIFE” இருக்க முடியும் என்றால் "HOUSE HUSBAND"களும் இருக்க முடியும்..! - மதுரை ஐகோர்ட்டு

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐகோர்ட்டு மதுரைக் கிளை கவலை தெரிவித்துள்ளது.

மதுரை,

“HOUSE WIFE” இருக்க முடியும் என்றால்.. "HOUSE HUSBAND"களும் இருக்க முடியும் என்று ஐகோர்ட்டு மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டு மதுரை கிளை

சமூகத்திலும் குடும்ப அமைப்பிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை மிகவும் முக்கியமான மற்றும் முற்போக்கான கருத்து ஒன்றை வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களின் வேலை வாய்ப்புகளுக்குத் திருமணம் தடையாக உணர்வதால் அதனை முழுவதுமாக தவிர்க்க விரும்புவதாகவும், திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கவலை தெரிவித்துள்ளது.

House Husband

திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதிகள் இருவர் விவாகரத்து கோரிய வழக்கில் இந்த கருத்துகளை தெரிவித்த நீதிபதிகள், கணவர்கள் வீட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தால் இந்த நிலைமை மாறக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், "House Wife" இருக்க முடியும் என்றால் "House Husband”களும் இருக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குடும்ப அமைப்பு

மேலும் இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும். வீட்டு பராமரிப்பாளர் என்ற சொல் பாலின நடுநிலையானது. மனைவி வீட்டு பராமரிப்பாளராக ஆற்றும் பணிகள் பொருளாதார மதிப்புமிக்கவை என்றும் மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சமூகத்தில் காலம் காலமாக ஆண்களே குடும்பத்தின் பொருளீட்டும் நபராகவும், பெண்கள் மட்டுமே வீட்டைப் பராமரிக்கும் நபராகவும் பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கட்டமைப்பை உடைக்கும் வகையில் ஐகோர்ட்டு மதுரை கிளை தனது கருத்தை பதிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT