தமிழக செய்திகள்

கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது: ஆதவ் அர்ஜுனா தாக்கு

மக்கள் விரும்பும் கட்சி தவெக என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

சென்னை,

மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பேசியதாவது;

”மக்கள் விரும்பும் கட்சி தவெக. எதிர்காலத்தை நம்பி அனைவரும் தவெகவில் இணைகின்றனர். எந்த குதிரை பேரமும் இல்லை. எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எடப்பாடி தொகுதியில் வேட்பாளரை ஈபிஎஸ் விலைக்கு வாங்கினார். சூழ்ச்சி செய்துதான் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். ஜெயலலிதா ஆட்சி செய்தபோது அதிமுகவினர் கட்சியில் இருந்து வெளியேறவில்லை. உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் ஏன் எங்களிடம் வருகின்றனர். உங்கள் மீதான தவறை யோசியுங்கள்.

அதிமுக, திமுக இப்போவே கூட்டணி வைக்க தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது. காங்கிரஸ், விசிக முடிவுகளில் திமுக தலையிட முடியாது.”

இவ்வாறு அவர் பேசினார்.