சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்திலாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை; முதல்வர் விஜய்க்கு ஆபத்து வருகிறது என்றால் அதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனாதான்.
இனிமேல் எந்த காலத்திலும் முதுகில் குத்துவிட்டு ஓடியவர்களை சேர்க்க மாட்டோம். அவர்களோடு ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது. இனி கட்சி தொண்டன் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; காங்கிரஸ் எங்கு உள்ளதோ அந்த கூட்டணியுடன் நாங்கள் இருக்க மாட்டோம்
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருந்தாலும், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியை டைவர்ஸ் பண்ணிட்டோம் சில கட்சிகள் எங்களை விட்டு சென்றாலும் எங்களோடு ஆலோசனை செய்துவிட்டு சென்றனர்; அது ஒரு வகையான டைவர்ஸ்; ஆனால் காங்கிரஸ் உடன் செய்துள்ள டைவர்ஸ் வேறு வகையானது என்றார்.