தமிழக செய்திகள்

‘வன்னி அரசு விதிகளை மீறியிருந்தால் நடவடிக்கை பாயும்’ - கர்நாடக வனத்துறை மந்திரி

அமைச்சர் வன்னி அரசு வெளியிட்ட வீடியோ குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமீபத்தில் முதுமலை யானைகள் காப்பகம், பந்திப்பூர் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வனத்துறை வாகனத்தில் சபாரி சென்றதும், புலிகள் அருகே சென்றது போலவும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

கர்நாடக மந்திரி

இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், கர்நாடக அரசு இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், அமைச்சர் வன்னி அரசு விதிகளை மீறியிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக வனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆய்வு செய்ய உத்தரவு

இது குறித்து ராமலிங்க ரெட்டி கூறுகையில், “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இது போன்று இறங்கி நடப்பதற்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் சிறப்பு அனுமதி பெற வேண்டும். தமிழக அமைச்சர் வெளியிட்ட வீடியோ எனது பார்வைக்கு வந்துள்ளது. அது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

நடவடிக்கை

ஒருவேளை அந்த பகுதியில் வனத்துறையின் விதிமுறைகளை அமைச்சர் வன்னி அரசு மீறி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT