சென்னை,
தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், புஸ்சி ஆனந்த்,செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்தார் நோன்பு திறப்பு விழாவில் ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இப்தார் நோன்பு திறந்த பிறகு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையிலும் விஜய் பங்கேற்றார்.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக இன்று காலை முதல் விஜய் நோன்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே நடைபெறும் நிகழ்வில் விஜய் கலந்து கொண்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.